தஞ்சாவூரில் நம்மாழ்வார் பெயரில் வேளாண் பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் உரையாற்றி வருகிறார்.
அப்போது, தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையின்படி, இயற்கை வேளாண்மையில் மாநிலத்தை முதன்மையானதாக மாற்றும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டையில், நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ. 15 கோடி மாநில நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்காக, முதல்கட்டமாக 2026 - 27 நிதியாண்டில் ரூ. 5 கோடி ஒதுக்கப்படும் என அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
மேலும், நீலகிரி மாவட்ட விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ரூ. 10 கோடி மதிப்பீட்டில் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Summary
Nammalvar Agricultural Polytechnic College in Thanjavur! Announcement in the budget!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண் பட்ஜெட்! உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம், வேளாண் கண்காட்சிகள்!

இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்! தமிழக வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
சென்னையில் ரூ.1,355 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

பட்ஜெட்டில் ஏமாற்றம்! முன்னாள் நிதியமைச்சர்தங்கம் தென்னரசு! | TVK | TN Budget
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



