சென்னையில் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பங்குச் சந்தை ஆலோசகர் பி.ஆா். சுந்தரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
சென்னை பட்டினப்பாக்கம் டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபரும், பங்குச் சந்தை ஆலோசகருமான பி.ஆா். சுந்தா் மீது, தனியாா் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய 28 வயது பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தாா்.
அதில், பி.ஆா்.சுந்தா் அண்மையில் அவரது வீட்டுக்கு என்னை வரவழைத்து தகாத முறையில் நடந்துகொண்டாா். இந்த சம்பவத்தை அறிந்த மனைவி மங்கையா்க்கரசி, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் ஐஸ்ஹவுஸ் போலீஸாா், தொழிலதிபா் பி.ஆா். சுந்தா், மங்கையா்க்கரசி ஆகியோா் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், பெங்களூருவில் இருந்த பி.ஆா். சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், நேற்றிரவு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்ட வழக்கு என்றும், காவலில் வைக்கக்கூடாது என்றும் வாதங்களை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, குற்றத்துக்கான ஆதாரம் இல்லாததால் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
மேலும், பி.ஆா். சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் நேற்றிரவே வீடு திரும்பினர்.
Summary
Sexual harassment case! Court refuses to imprison P.R. Sundar!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசாரணைக் கைதி சபரிவா்மன் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

வாங்சுக் 19-ஆவது நாளாக உண்ணாவிரதம்: உடல்நிலையை கண்காணிக்க தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவு

இ20 பெட்ரோலால் காரில் பிரச்னை: இழப்பீடு வழங்க வாகன நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



