முழுமையாக பயிர்க் கடன் தள்ளுபடி, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்குடன் இருப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின்போது, தவெகவின் தேர்தல் அறிக்கையில் "5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த தவெக அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000 வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம்பிரித்து, ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் தவெக கூட்டணி அரசைக் கண்டித்து, அதிமுக சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தவெக அரசு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டோம். இந்த நிலையில், தவெக கூட்டணி அரசு தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.
எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேக்கேதாட்டு பிரச்னையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில், ஆக. 14 ஆம் தேதியில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
AIADMK to hold protests across Tamil Nadu on August 14 demanding a complete crop loan waiver
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரி தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம்! விவசாயிகள் கைது
பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? வேளாண் துறைச் செயலா் பொ.சங்கா் பதில்

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு... தவெக அரசு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி



