FOLLOW US

ON GOOGLE DISCOVER

உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

திமுக, அதிமுக புறக்கணித்திருப்பது புதிய நட்புக்கான முடிவாக இருக்கலாம்! ராஜ்மோகன்

அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்திருப்பது பற்றி அமைச்சர் ராஜ்மோகன் கருத்து

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப்படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 2:23 pm IST

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் திமுக, அதிமுக கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாநில நலனில் அக்கறையின்மையை காட்டுகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது கிடையாது. ஆரம்பம் முதலே நாங்கள் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகிறோம். இது மாநில பிரச்னை. மாநில உரிமைக்கான பிரச்னையில் அவர்கள் கலந்துகொள்ள மறுப்பது என்பது முறையன்று. மாநில உரிமைகள் மீதான அவர்களின் அக்கறையின்மையை இது வெளிப்படுத்துகிறது.

காவிரி விவகாரத்தை யாரும் திசைதிருப்ப முடியாது. அதற்காக இந்த கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற கூட்டங்கள் நடந்துள்ளன.

திமுக காவிரி விவகாரத்தை காண்பித்து சுயநல அரசியல் செய்கின்றனர்.

எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணித்திருப்பது அவர்களின் சொந்த முடிவாக இருக்கலாம். அவர்களின் புதிய நண்பர்களுக்கான சுயமுடிவாக இருக்கலாம்.

இன்று நடப்பதும் அனைத்துக் கட்சி கூட்டம்தானே? அவர்கள் ஏன் வரவில்லை. அல்லது நேற்று சட்டப்பேரவையிலேயே ஒரு சிறப்புத் தீர்மானம் வேண்டும் என்று கேட்டிருக்கலாமே" என்றார்.

Summary

Rajmohan comments on the DMK and AIADMK have boycotted all party MPS meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.