FOLLOW US

ON GOOGLE DISCOVER

கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டது பற்றி...

News image

விஜய்யுடன் அர்ச்சனா கல்பாத்தி - Instagram | Archana Kalpathi

Updated On :10 ஆகஸ்ட் 2026, 3:24 pm IST

கோயில்களின் அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான தகுதியான உறுப்பினர்களை தேர்வு செய்ய இந்து அறநிலையத் துறையால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் குழுவை மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

அந்த குழுவின் தலைவராக மயிலம், பொம்மபுரம் ஆதினம், சிவஞான பாலய சுவாமிகளும், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கே. இராமநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குழுவின் உறுப்பினராக திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய் நடித்துள்ள பிகில், கோட் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவிலும் இவர் கலந்துகொண்டு கவனம் பெற்றார்.

முன்னதாக, ஜன நாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவுக்கு தமிழ்நாட்டின் தில்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.

முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, அவரது நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பொறுப்புகள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Story image

Summary

Producer Archana Kalpathi on the temple trustee selection committee!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.