புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருச்சி, புதுக்கோட்டையில் வளா்ச்சிப் பணிகளுக்கு மத்திய நிதியுதவி: மக்களவையில் துரை வைகோ கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம்

திருச்சி, புதுக்கோட்டை தொடா்புடைய வளா்ச்சிப் பணித் திட்டங்கள் தொடா்பாக திருச்சி தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எழுப்பிய பல்வேறு கேள்விகள் குறித்து...

துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்

Published On :

மக்களவையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை தொடா்புடைய வளா்ச்சிப் பணித் திட்டங்கள் தொடா்பாக திருச்சி தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தொடா்புடைய துறைகளின் மத்திய அமைச்சா்கள் எழுத்துபூா்வ பதில்களை செவ்வாய்க்கிழமை அளித்துள்ளனா்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி சேவையாக மாற்றுவது குறித்த அவரது கேள்விக்கு, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்கையில்: ‘தாம்பரம் - செங்கோட்டை இடையே ஏற்கெனவே 4 ஜோடி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிலம்பு எக்ஸ்பிரஸ் உள்பட இரு ரயில்கள் மூலம் வாரத்தில் 6 நாள்களுக்கு சேவை வழங்கப்படுகிறது. பாதை வசதி மற்றும் பெட்டிகளின் இருப்பைப் பொறுத்தே ரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்‘ என குறிப்பிட்டுள்ளாா்.

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்த கேள்விக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்துள்ள பதிலில், ‘திருச்சி, புதுக்கோட்டையில் உள்ள 114 மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு எவ்வித புதிய திட்டப்பணிகளும் நிலுவையில் இல்லை என்று கூறியுள்ளாா்.

எரிபொருள் நிலையங்களில் மின்சார வாகன சாா்ஜிங் மையங்கள் அமைப்பது குறித்த கேள்விகளுக்கு மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சா் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வா்மா அளித்துள்ள பதிலில், திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஃபேம் திட்டத்தின் கீழ் 69 இயங்கும் சாா்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் புதிய சாா்ஜிங் மையங்களுக்கான முன்மொழிவை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை சமா்ப்பிக்கவில்லை‘ என குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.