தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததைப் பற்றி...

முன்னோர்களுக்கு தர்ப்பணம். - (கோப்புப்படம்)

Published On :

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையில் காவிரியில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மூதாதையர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், தங்களின் குடும்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.

இன்று (ஆக. 12) ஆடி அமாவாசை என்பதால் மேட்டூர் காவிரியில் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

காவிரி பாலம், மட்டம், புதுபாலம், அணைக்கட்டு முனியப்பன் கோயில் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

கூனாண்டியூர் திப்பம்பட்டி காவிரி கரைகளிலும் குவிந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். குடும்பம் குடும்பமாக டெம்போக்களில் வந்த மக்கள் புரோகிதர்களை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

Summary

In Mettur, Salem district, a large number of people performed Tharpanam (ritual offerings) for their ancestors on the occasion of Aadi Amavasai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.