FOLLOW US

ON GOOGLE DISCOVER

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டதைப் பற்றி...

News image

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 9:18 am IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.

இந்த நிலையில், இன்று (ஆக. 12) ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே ராமேசுவரம் வருகை தந்தனர். இன்று அதிகாலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடி சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைத்து பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.

ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று தீர்த்த வாரி நடைபெற்றது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்திற்கு போக்குத்துறையின் சார்பில் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் துணைக்கண்காணிப்பாளர் திருப்பதி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது இடங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. இடையூறு இன்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டன.

Summary

On the occasion of Aadi Amavasya, people gathered at the Agni Theertham beach in Rameswaram to perform rituals for their ancestors and offer prayers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.