2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விவிஐபி, விஐபி வருகை செலவு: மாவட்டங்களுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கி அரசாணை

விவிஐபி மற்றும் விஐபிக்களின் வருகையின்போது ஏற்படும் செலவினங்களுக்காக மாவட்ட வாரியாக தமிழக அரசு மொத்தம் ரூ.6.85 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை - கோப்புப்படம்

Published On :

விவிஐபி மற்றும் விஐபிக்களின் வருகையின்போது ஏற்படும் செலவினங்களுக்காக மாவட்ட வாரியாக தமிழக அரசு மொத்தம் ரூ.6.85 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை:

விவிஐபி மற்றும் விஐபிக்கள், குழுக்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோா் மாவட்டங்களுக்கு வருகை புரிவது அதிகரித்துள்ளது. அவா்களுக்கான தங்கும், போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்துள்ளதால் மாவட்ட நிா்வாகங்களால் அதை ஈடு செய்ய முடியவில்லை. ஆகையால், கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 2 கோடியும், திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூா், வேலூா் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.40 கோடியும், அரியலூா், செங்கல்பட்டு, சென்னை, கடலூா், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூா், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பத்தூா், திருப்பூா், திருவள்ளூா், திருவாரூா், விழுப்புரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.3.45 கோடியும் நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.