மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

rain

மழை - கோப்புப்படம்.

Published On :

சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை, மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தொய்வடைந்துள்ளது. இருப்பினும், எஞ்சியுள்ள ஈரப்பத, பகல்நேர வெப்பம் மற்றும் காற்று ஒருங்கிணைவு ஆகியவை தமிழ்நாட்டில் இடிமழை செயல்பாட்டைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.

தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இன்று(ஆக. 14) மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.

காவிரி டெல்டா மற்றும் உள்பகுதி மாவட்டங்களான திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே இடிமழை செயல்பாடு எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாவட்டங்களான சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் இடிமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Private weather analyst Hemachandran has stated that there is a possibility of rain in northern districts, including Chennai, this evening or at night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.