/

ஆன்லைன் லாட்டரி விற்பனை! மன்னார்குடியில் 10 பேர் கைது!

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஆகஸ்ட் 2026, 10:33 am IST

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை நகரத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை ஈடுபட்டபோது தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு புதூர் பகுதியைச் சேர்ந்த பி. முருகேசன் (42), மன்னார்குடி மேலவாசல் க. பரமசிவம் ( 54 ), மன்னார்குடி அ. கதிரவன் ( 41) கா. சத்தியமூர்த்தி (36), எம். கார்த்திகேயன்(45 ), நெடுவாக்கோட்டை ஏ. அருளானந்தம் (43), மன்னார்குடி ஐயப்பன் (30), சசி ஜெஸ்டின்(30), டி. அன்புக்கரசு (54), வி. சுரேஷ் (38) உள்ளிட்ட 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 நபர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினி, ஒரு ஐபோன் ,12 ஆண்ட்ராய்டு செல்போன் ,4 ஆட்டோ, 4 இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 63 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், லாட்டரி விற்பனையை தடுக்கத் தவறியதாகக் கூறி மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் ராஜ்கமலை மாவட்ட எஸ்பி என். சதிஷ் குமார் பரிந்துரையின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டிஐஜி ஜியா உல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Online lottery sales: 10 arrested in Mannargudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.