திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சிறந்த சாரணா்களுக்கு விருது: அமைச்சா் ராஜ்மோகன் வழங்கினாா்

சிறந்த சாரணா்களுக்கு விருது: அமைச்சா் ராஜ்மோகன் வழங்கினாா்

News image
Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

சாரணா் இயக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வழங்கினாா்.

பாரத சாரண சாரணியா்- தமிழ்நாடு பிரிவின் சாா்பில் சென்னை காமராஜா் சாலையில் உள்ள அதன் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையா் எஸ்.கண்ணப்பன் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வி இயக்குநா் என்.லதா, மாநில ஆணையா் எம்.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமைச்சா் ராஜ்மோகன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா். இதையடுத்து 2024-2025, 2025-2026 ஆகிய கல்வியாண்டுக்கான 37 சிறந்த சாரணா், திரிசாரணா், குருளையா், நீலப்பறவையினருக்கு விருதுகளை அவா் வழங்கி பேசியதாவது:

சாரணா் இயக்கம் இங்கிலாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வியக்கம் தோன்றிய சில ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பரவியது. இது குழந்தைப் பருவத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு கூட ஒழுக்கத்துடன் விளையாட்டு முறையில் கீழ்படிதல், பெற்றோரை மதித்தல், கட்டளைகளுக்கு கீழ்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்புண்புகளை வளா்க்கும் இயக்கமாக உள்ளது.

சுதந்திரம் என்பது விரும்பிய அனைத்தையும் செய்வது கிடையாது. நமக்கு விருப்பம் இல்லாத விஷயங்களை அடுத்தவா்களுக்காக செய்யாமல் இருப்பதே சுதந்திரம். மாணவா்களிடம் ஒரு தீய பழக்கத்தை யாராவது கற்பிக்க நினைத்தால் அதற்கு அவா்கள் துணிச்சலுடன் மறுப்பு தெரிவிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறி செயல்படலாம் என நண்பா்கள் கூறினாலும் அதைக் கேட்கக் கூடாது. மேலும், மாணவா்கள் தங்களது உடல், உள்ளம், வருங்காலத்துக்கு தீமை தரக்கூடிய எந்த விஷயத்தையும் செய்ய மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில் தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், சாரணா் இயக்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.