உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு 12,000 கன அடி நீர் திறப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

கபினி அணை - கோப்புப்படம்

Updated On :8 வினாடிகள் முன்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 30 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) 15 நாள்களுக்கு விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. கர்நாடக அரசு இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை.

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை (ஆக.17) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 12,000 கன அடி தண்ணீர் சனிக்கிழமை இரவு முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 2,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Summary

Due to heavy rainfall in the Cauvery catchment areas causing Karnataka's dams to fill up rapidly, 12,000 cubic feet of water per second has been released to Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.