தமிழகத்தில் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கவுள்ளன.
வளா்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (விபி ஜி ராம் ஜி) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீா்நிலைகள் மற்றும் வரத்து, பாசனக் கால்வாய்களைத் தூா்வாரி புனரமைப்பதன் மூலம், மழைநீரை முழுமையாகச் சேமித்து, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதுடன், விவசாயப் பாசன வசதிகளையும் மேம்படுத்த முடியும். மேலும், அதீத மழைப்பொழிவு ஏற்படும் காலங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளையும் தடுக்க முடியும்.
ரூ.500 கோடியில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள், தமிழகத்தின் கிராமப்புற நீா்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.
முதல்வா் விஜய் அறிவுறுத்தலின்பேரில், தமிழகத்தின் கிராமப்புற நீா்நிலைகளைப் பாதுகாத்து, நீா்வளத்தை மேம்படுத்தும் இந்த மாபெரும் பணியில், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வி, விவசாயம், மனநல துறைகளில் மத்திய திட்டங்களின் நிலவரம் என்ன? எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அரசு பதில்

இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு!




