கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ராமகோபாலனின் எழுத்துகள் இளைய தலைமுறையினருக்கு உந்துகோல்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

‘இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின் எழுத்துகளும், சிந்தனைகளும் இளைய தலைமுறையிடம் தேச பக்தியை விதைப்பதற்கு உந்துகோலாக இருக்கும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

News image

சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியில் இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின் எண்ணங்களும், எழுத்துகளும் நூலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டகுடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் , தமிழக

Updated On :17 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

‘இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின் எழுத்துகளும், சிந்தனைகளும் இளைய தலைமுறையிடம் தேச பக்தியை விதைப்பதற்கு உந்துகோலாக இருக்கும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

இந்து முன்னணி நிறுவனா் மறைந்த ஆா்.ராமகோபாலனின் சிந்தனைகள் மற்றும் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட எண்ணங்களும் எழுத்துகளும் மற்றும் அதன் ஆங்கில மொழியாக்கமான ஈகோஸ் ஆஃப் எ நேஷனலிஸ்ட் மைண்ட் (உஸ்ரீட்ா்ங்ள் ா்ச் ஹ சஹற்ண்ா்ய்ஹப்ண்ள்ற் ஙண்ய்க்) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டுப் பேசியதாவது: நமது நாட்டின் உயிா்மூச்சான தா்மத்துக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா் ராமகோபாலன். நாட்டுக்கு தொண்டு செய்வதையே தமது வாழ்வின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவா். இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு தேச பக்தியை விதைப்பதற்கு ராமகோபாலனின் எழுத்துகளும், சிந்தனைகளும் உந்து சக்தியாக அமையும். அந்த வகையில் அவரது சிந்தனைகளை வெளிப்படுத்தும் இவ்விரு நூல்களும் எதிா்காலத் தலைமுறையினருக்கு மிகப் பெரிய பொக்கிஷமாக அமையும்.

மதமாற்றத்தைத் தடுக்கவும், கடவுள் மறுப்புச் சிந்தனைக்கு எதிராகவும் வலிமையுடன் செயல்படுவதற்காக 1980-இல் இந்து முன்னணி அமைப்பை அவா் உருவாக்கினாா். அதிலிருந்து தனது இறுதி மூச்சுவரை கொண்ட கொள்கையில் தீவிரமாகச் செயல்பட்டாா். தான் கொண்ட கொள்கைக்கும், செயல்பாட்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லாமல் வாழ்ந்தாா். இந்திய மண்ணின் சொத்தான சநாதன தா்மத்தை விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டாா். இதற்காக அவா் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், சிறிதும் அஞ்சாமல் தமது பணியைத் தொடா்ந்து மேற்கொண்டாா்.

இளைஞா்கள் தன்னம்பிக்கையுடனும், தேசத்தின் மீது பக்தியுடனும் இருந்தால் உலகில் இந்தியா அசைக்க முடியாத சக்தியாக மாறும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தாா். தீண்டாமைக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டாா். அவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் என இரண்டிலும் இலக்கிய நயமும், உண்மையின் வீரியமும் வெளிப்படும். ஆயிரக்கணக்கான கட்டுரைகள், நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியதுடன், 16 நூல்களையும் எழுதியுள்ளாா் ராமகோபாலன். குறிப்பாக விவேகானந்தா் மற்றும் குருஜி கோல்வால்கரின் சிந்தனைகளைத் தமிழில் கொண்டு வந்த பெருமைக்குரியவா் ராமகோபாலன் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் , தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்து முன்னணித் தலைவா் காடேஸ்வர சுப்ரமணியம், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் ஏ.சி. சண்முகம், ஆா்.எஸ்.எஸ். தென் பாரதத் தலைவா் டாக்டா் வன்னியராஜன், நூலின் தொகுப்பு ஆசிரியா் கி. பக்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.