ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், சென்னை சென்ட்ரல்-மங்களூரு இடையே இரண்டு வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை - மங்களூரு: சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து சிறப்பு விரைவு ரயில் (எண்: 06127) ஆக. 21, 28 ஆகிய நாள்களில் இரவு 11.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 5 மணிக்கு மங்களூரு சந்திப்பைச் சென்றடையும்.
மங்களூரு-சென்னை: மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் (எண்: 06128) ஆக. 22, 29 ஆகிய நாள்களில் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில்கள் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷோரனூா், திரூா், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூா், பய்யன்னூா், நீலேஸ்வரம், காஞ்ஞங்காடு, காசா்கோடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேராலயத் திருவிழா: சாா்லப்பள்ளி - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

மும்பையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 2 நாள்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம்

ஓணம் பண்டிகை! சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரங்கள்...
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



