திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

மேகமலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை! அண்ணாமலை

மேகமலை விவகாரத்தில் அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்...

Meghamalai

கோப்புப் படம் - DNS

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:53 pm IST

மேகமலை விவகாரத்தில் வனங்களையும், புலிகள் காப்பகத்தையும் பாதுகாப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மனிதாபிமானத்துடன் பாதுகாப்பது அரசின் கடமை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வரும் மக்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், அரசியல் தலைவர்கள் பலரும், மேகமலை மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். விவசாயம், தோட்டத் தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கை, வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.

பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதில் தடைகள் ஏற்படுவதாகவும், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சோதனைச் சாவடிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள், வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், பட்டா வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக ரீதியான ஆக்கிரமிப்பாளர்கள் என அனைவரையும் ஒரே பிரிவாகக் கருதி நடவடிக்கை எடுப்பது நியாயமான அணுகுமுறை அல்ல.

கடந்த 2026 மே மாதம், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தேவையான இடங்களில் பொதுமக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, மாற்றுக் குடியிருப்பு, மாற்று வாழ்வாதாரம் மற்றும் உரிய கால அவகாசத்துடன் மனிதாபிமான அடிப்படையில் இதனை தமிழக அரசு அணுக வேண்டும்.

தமிழக அரசு, வனத்துறை, வருவாய்த்துறை, நிலஅளவைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, செயற்கைக்கோள்/DGPS அடிப்படையில் ஒவ்வொரு நிலத்தையும் மறுஆய்வு செய்து, உண்மையான வனநிலம், சட்டப்பூர்வமான பட்டா நிலம், நீண்டகால குடியிருப்பு, உண்மையான ஆக்கிரமிப்பு மற்றும் விவசாயப் பகுதி ஆகியவற்றைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

மேகமலை விவகாரத்தில் வனங்களையும், புலிகள் காப்பகத்தையும் பாதுகாப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மனிதாபிமானத்துடன் பாதுகாப்பது அரசின் கடமை. சட்டத்தின் அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் மேகமலை மக்களுக்கு நிரந்தரத் தீர்வை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

வனத்தையும் காப்போம், வனவிலங்குகளையும் காப்போம். அதே நேரத்தில், பல தலைமுறைகளாக அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

It is the government duty to protect the livelihoods of the people of Meghamalai: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.