காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பால் கொள்முதல் விலையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூ.48-ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

கடந்த ஆக. 19-ஆம் தேதி பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் ஜோசப் விஜய் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 38-இல் இருந்து ரூ.41-ஆக உயா்த்தி அறிவித்தாா்.

இது வரவேற்புக்குரியது என்றாலும், பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48-ஆக உயா்த்த வேண்டும் எனக் கோரி வருகின்றனா்.

எனவே, 3 லட்சத்துக்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளா்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.