மன்னார்குடி: லாரியில் இருந்து தவறி விழுந்த சுமைப் பணியாளர் பலி!

மன்னார்குடியில் சுமைப் பணியாளர் தவறி விழுந்து பலியானது பற்றி...

Mannargudi!

தவறி விழுந்த சுமைப் பணியாளர் - DPS

Published On :29 ஆகஸ்ட் 2026, 11:49 am IST

மன்னார்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்த சுமைப் பணியாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உப்புக்காரத்தெரு கோரிமேடு காளான்துரை மகன் சக்திவேல் (50). இவர் சுமை தூக்கும் பணியாளராக வேலை செய்து வந்தார். இன்று காலை வெளியூரிலிருந்து வந்த சுமை லாரி ஒன்றின் மூலம் எடுத்துவரப்பட்ட சரக்குகளை சக்திவேல் மன்னார்குடி காமராஜர் சிலை அருகே லாரியிலிருந்து இறக்கிவிட்டு லாரி மீது நின்றுள்ளார்.

அப்போது, லாரியை ஓட்டுநர் இயக்கியதால் நிலை தடுமாறிய சக்திவேல் கீழே விழுந்தார். லாரியின் பின் சக்கரம் சக்திவேலின் தலை மீது ஏறி இறங்கியது இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி நகர போலீஸார் சக்திவேலின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.