திண்டுக்கல்லில் ஆன்லைன் செயலி மூலம் ரூ.30 கோடி மோசடி: பெண் உட்பட 3 பேர் கைது!

நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் ரூ.30 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது பற்றி....

Rs 30 crore online app scam in Dindigul: 3 arrested, including a woman

கைது செய்யப்பட்டவர்கள்.

Published On :40 வினாடிகள் முன்பு

நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் சுமார் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த விவகாரத்தில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் ரூ. 50,000 முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என சிலர் ஆசைவார்த்தை கூறி பணம் வசூலித்துள்ளனர்.

பின்னர் போலியாக கணக்குகளைத் தொடங்கி, அதில் டிஜிட்டல் கரன்சி வரவு வைக்கப்பட்டு போலி கணக்கு விவரங்களைக் காட்டியும் நம்ப வைத்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல் ஏமாற்றப்பட்டனர்.

அத்துடன் அந்த ஆன்லைன் செயலியும் திடீரென முடக்கப்பட்டது. இளையராஜா உட்பட சுமார் 15,000-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 30 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

​பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தற்போது ரமேஷ், விஜய், அனிதா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை திண்டுக்கல்​ மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.

Summary

Three people, including a woman, have been arrested in connection with an online app scam involving over Rs 30 crore near Natham.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.