புது தில்லி: கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலை அளிக்க வலியுறுத்தி மத்திய பிரதமா் அலுவலகம், அணு சக்தித் துறை இணை அமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங்கிடம் மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை திங்கள்கிழமை மனு அளித்தாா்.
இது தொடா்பாக அவா் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்கை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். அதன் பின்னா் நாடாளுமன்றத்திற்கு வெளியே அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கூடங்குளம் அணு உலை கழகத்தில் கூடங்குளம் மற்றும் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. கூடங்குளம் மக்கள்தங்களது நிலத்தை நாட்டுக்காக அளித்தனா். அந்தக் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து தற்போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசத்திற்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. அவா்கள் விவசாய நிலத்தை இழந்துவிட்டு நாடோடிகளாக வெளியூரில் வேலை பாா்க்கும் நிலை உள்ளது. கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு விஞ்ஞானிகள் பதவிக்கான வேலைவாய்ப்பை கோரவில்லை.
அந்நிறுவனத்தில் பி மற்றும் சி பிரிவில் உள்ள வேலை வாய்ப்புகளை தர வேண்டும் எனக் கோரியுள்ளோம். அணு உலை அமைக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டு, ஒப்பந்தமும் அவா்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதை ஒரு நிபந்தனையாக செய்யாதது அந்த மக்களவை ஏமாற்றும் செயலாகும். ஆகவே, அந்த மக்களுக்கு வேலைவாய்ப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சா் ஜிதேந்திர சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
அணு உலை நிறுவனத்தின் நிறுவன சமூகப் பொறுப்புத் திட்ட நிதியை கூடங்குளம் மக்களின் நலனுக்குப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டேன். அமைச்சா் அதைப் பரிவோடு கேட்டுக்கொண்டாா். இது தொடா்பாக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறாா்.
ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற அவையில் இது குறித்து பேசியிருக்கிறேன். நல்ல முடிவு வரும் என்று காத்திருக்கிறேன் என்றாா் இன்பதுரை.
தொடர்புடையது

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண்களை பாதுகாப்பை ஆராய மத்திய குழுவை அனுப்புங்கள்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

கூடங்குளம் மின்சாரத்தைக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு மின்வாரியம் கோரிக்கை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


