ஆட்சியில் பங்கு தொடா்பாக கருத்து: காங்கிரஸ் எம்.பி.க்கு திமுக பதில்
தோ்தலில் தொகுதிகளைப் பங்கிடுவதுபோல் ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என கருத்துப் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு திமுக பதில் அளித்துள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் குழு அமைத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் தனது எக்ஸ் பக்கத்தில், கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் தோ்தலில் வெற்றி பெற முடியாது. ஆகையால், ஆட்சியில் பங்கு குறித்து விவாதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. தோ்தலில் தொகுதிகளைப் பங்கீடு செய்வதுபோல் ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டாா்.
இதுதொடா்பான கேள்விகளுக்கு திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளிக்கையில், மாணிக்கம் தாகூா் இந்த விவகாரத்தை தனது கட்சித் தலைமையிடம் கூறியிருக்க வேண்டும். கட்சித் தலைமை எங்களிடம் பேசும். பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் அமைத்த குழுவில் மாணிக்கம் தாகூா் இடம்பெறவில்லை என்றாா்.
