

அதிமுக - பாஜக கூட்டணியில் பிரச்னை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசுகையில் "அதிமுக - பாஜக இடையே கூட்டணி குறித்த சர்ச்சை இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். தேர்தல் முடிந்து, வெற்றிபெற்றவுடன், யார் யாரெல்லாம் அமைச்சர்கள்? என்பதை முடிவு செய்யப்படும். நாங்கள் யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
இரட்டை எண்ணிக்கையில்தான் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குச் செல்வர். ஒருவர் வந்து பேசினால், அது அழுத்தம் என்ற பொருள் இல்லையே.
தேமுதிகவுடன் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இப்போதுதான் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கின்றனர். முதற்கட்டமாக, அன்புமணி வந்துள்ளார்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.