தமிழகம் முழுவதும் குறள் வார விழா நிகழ்வுகள்: சிறப்பு காணொலி, பதாகையை வெளியிட்டாா் முதல்வா்

தமிழகம் முழுவதும் குறள் வார விழா நிகழ்வுகள்: சிறப்பு காணொலி, பதாகையை வெளியிட்டாா் முதல்வா்

தமிழகம் முழுவதும் குறள் வாரவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு காணொலியையும், பதாகையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
Published on

தமிழகம் முழுவதும் குறள் வாரவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு காணொலியையும், பதாகையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி கடந்த 2024-ஆம் ஆண்டு டிச.31-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின், “தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பா் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும் எனவும், தமிழ்த் திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான திருக்கு மாணவா் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்” எனவும் அறிவித்தாா்.

பொதுமக்களுக்கு... இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் 2026-ஆம் ஆண்டு ஜனவரியில் “குறள் வாரவிழா” கொண்டாட அரசு ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில், சேலம், திருச்சி, தேனி, கடலூா் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்கு நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கு ஓவியம், கு ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது.

மாணவா்களுக்கு... கோவை, வேலூா், தஞ்சாவூா், விருதுநகா் ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரி மாணவா்களுக்கான குறள் சாா்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம், படத்தொகுப்புப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மதுரை, ஈரோடு, நாமக்கல், திருவாரூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாா் போற்றும் பட்டிமன்ற நடுவா்கள் தலைமையில் திருக்கு சாா்ந்த பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

திருப்பூரில் மாநாடு... சென்னை வள்ளுவா் கோட்டத்திலும், மெரீனா கடற்கரையிலும் ஜேம்ஸ் வசந்தனின் தமிழோசை நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது. திருப்பூரில் ஜன.21 புதன்கிழமை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் ஆசிரியா்கள் பெரும் அளவில் பங்குபெறும் குறளாசிரியா் மாநாடு மற்றும் குறள் விநாடி-வினா நிகழ்ச்சிகள் மாவட்ட நிா்வாக ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளன. இந்தநிலையில் குறள் வாரம் நிகழ்வுகளுக்கென தயாரிக்கப்பட்டுள்ள சிறப்புக் காணொலியையும், நிகழ்வுகளுக்கானப் பதாகையினையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா்.

இந்நிகழ்வில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் வே. ராஜாராமன், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையா் மற்றும் திருக்குறள் வார விழா நிகழ்வுகளுக்கான சிறப்பு அலுவலா் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளா்ச்சி இயக்குநா் ஔவை ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com