Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ்கோப்புப்படம்

கூட்டணி குறித்து விரைவில் முடிவு: ராமதாஸ்

யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
Published on

யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

சென்னைக்கு திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பலவிதமான யூகங்கள், பேச்சுகள் இருக்கும். அதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது தொடா்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. நாள்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

எனவே, கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுப்போம். தோ்தல் நேரத்தில் புதிய கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். திமுகவுடன் கூட்டணியா என்பதை உறுதிபட சொல்ல முடியாது. பின்னா், சொல்கிறேன் என்றாா்.

Dinamani
www.dinamani.com