

வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர்கள், முக்கியப் பிரமுகர்கள் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் குவிந்து திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி நடிகர் ரஜினிகாந்த் கைகளை அசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரஜினியை நேரில் பார்த்து ஆரவாரம் செய்த அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து சால்வை உள்ளிட்ட பொருள்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.
தொடர்ந்து அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “ எல்லாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோசமாக இருந்தால்தான் மற்றவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்க முடியும்” என்றார்.
அதைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் புதிய படத்துக்கான அப்டேட் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர், “ஏப்ரலில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.