4 நாள்களுக்குப் பின் தங்கம் விலை குறைவு.. இன்றைய நிலவரம்!

நான்கு நாள்களுக்குப் பின்னர் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்திருப்பதைப் பற்றி...
Gold price
தங்கம்...படம்: பிடிஐ
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்து விற்பனையாகிறது.

கடந்த 4 நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,120 உயர்ந்திருந்த நிலையில், இன்று சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்திருக்கிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,230-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் ஏற்றத்தில் இருந்த வெள்ளி விலையும் சற்று சரிவைச் சந்திருத்திருக்கிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ. 306-க்கும், கிலோவுக்கு ரூ. 4,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 3,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் கடந்து வந்த பாதை (ஒரு சவரன் விலை)

  • ஜனவரி 16 - ரூ. 1,05,840

  • ஜனவரி 15 - ரூ. 1,06,320

  • ஜனவரி 14 - ரூ. 1,06,240

  • ஜனவரி 13 - ரூ. 1,05,360

  • ஜனவரி 12 - ரூ. 1,04,960

  • ஜனவரி 11 - ரூ. 1,03,200

Gold price
திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
Summary

In Chennai, the price of gold jewelry is selling at a decrease of Rs. 480 per sovereign on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com