

எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவருக்கு தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாப்படுகிறது. அதையொட்டி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அங்காங்கே வழங்கப்பட்டு வருகின்றன. இவைதவிர அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணாவின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.