

திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு மார்ச் 8 நடைபெறும் என்று திமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று(ஜன. 20) முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் விவரம் பின்வருமாறு :
திருச்சியில் மார்ச் 8இல் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடைபெறும். ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்னும் பெயரில் திமுக மாநில மாநாடு திருச்சியில் நடத்தப்பட உள்ளது.
பிப். 1 - பிப். 28 வரை தமிழகமெங்கிலும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்னும் பெயரில் திமுக தேர்தல் பரப்புரை நடத்தப்பட உள்ளது.
பிப். 1 - மார்ச் 8 வரை திமுக அரசு சாதனைகளை விளக்கி மகளிர் அணியினர் பரப்புரை
‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்னும் பெயரில் திமுக முகவர்களுக்கு தமிழகத்தில் 4 மண்டலங்களில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
சென்னை, விழுப்புரம் மண்டலங்களுக்கு படப்பையில் பிப். 11இல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வடக்கு மண்டலங்களுக்கு திருப்பத்தூரில் பிப். 14இல் மாநாடு பயிற்சி நடத்தப்பட உள்ளது.
தொகுதிக்கு 4 இடங்களில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்னும் பெயரில் நடத்தப்படும் பரப்புரையில் நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்று அரசு சாதனைகளை விளக்கிப் பேசும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
வாக்குச்சாவடிக்கு 10 பெண்கள் வீதம் ‘வெல்லும் தமிழ்ப் பென்கள்’ என்னும் பெயரில் பரப்புரை நடத்தப்படும். அதில், அவர்கள் வீடுதோறும் சென்று அரசு சாதனைகளை விளக்கி பரப்புரையில் ஈடுபடுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.