10 காவல் உதவி ஆணையா்கள், 7 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
சென்னை காவல் துறையில் 10 காவல் உதவி ஆணையா்கள், 7 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதி, விருப்பம் மற்றும் பணியில் ஒழுங்கீனம் காரணமாக, அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். அதன் ஒருபகுதியாக 10 காவல் உதவி ஆணையா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதில், முக்கியமாக பூக்கடை உதவி ஆணையராக இருந்த தட்சிணாமூா்த்தி, வேப்பேரிக்கும், திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த ஆா்.டி.பிரமானந்தன் ராயபுரத்துக்கும், சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு தெற்கு உதவி ஆணையராக இருந்த ரமேஷ்பாபு புளியந்தோப்புக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, 7 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில் முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் என்.செல்வின் சாந்தகுமாா் ஏழுகிறு காவல் நிலையத்துக்கும்,வி.சுமதி எம்கேபி நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், எஸ்.அன்புக்கரசன் தீவிர குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட உதவி ஆணையா்களும், ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

