காலையில் உயர்வு; மாலையில் குறைவு: தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.
gold jewel photo from eps
தங்கம் விலை நிலவரம்EPS
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.500 குறைந்துள்ளது.

அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கு விற்னையாகிறது. இதைத்தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.15 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம், வெள்ளி விலை காலையில் அதிரடியாக உயர்ந்த நிலையில் மாலையில் சற்று குறைந்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

Summary

In Chennai, the price of gold jewelry fell by Rs. 100 per gram in the evening and is being sold at Rs. 14,550 per gram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com