தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ’சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு’ பற்றி...
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!
Updated on
1 min read

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று (ஜன. 30) தொடங்கியது.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா மற்றும் தில்லி சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடக்கிவைத்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா கலந்துகொண்டார்.

இந்த கருத்தரங்கில் தில்லி, மத்திய பிரதேசம், தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

Summary

The New Indian Express Tourism Summit 2026 begins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com