வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள் தமிழகத்தில் புதிதாக 36 மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு மொத்தம் 1,120 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எஃப்எம்ஜி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனா். அவ்வாறு பயிற்சி பெறும் காலம் தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுகிறது.
தமிழக மருத்துவமனைகளில் உள்ளுறைப் பயிற்சி வழங்குவதற்கான இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு 7.5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. அதை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லாத 36 மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு 750 இடங்களும், 13 மருத்துவமனைகளில் 370 இடங்களும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான உள்ளுறைப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









