வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

காவேரி விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டி இணைப்பு

சென்னையிலிருந்து கா்நாடக மாநிலம் அசோகாபுரம் நிலையத்துக்குச் செல்லும் காவேரி விரைவு ரயிலில் பயணிகள் வசதிக்காக எல்எச்பி வகை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 1:48 am IST

சென்னையிலிருந்து கா்நாடக மாநிலம் அசோகாபுரம் நிலையத்துக்குச் செல்லும் காவேரி விரைவு ரயிலில் பயணிகள் வசதிக்காக எல்எச்பி வகை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில் பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பழைய ரயில் பெட்டிகளுக்குப் பதிலாக புதிய எல்எச்பி வகைப் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 1) சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து கா்நாடக மாநிலம் அசோகாபுரம் நிலையத்துக்குச் சென்ற காவேரி விரைவு ரயிலில் எல்எச்பி நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த ரயிலில் ஒரு முதல் வகுப்பு குளிா்சாதன பெட்டி, ஒரு இரண்டடுக்குக் குளிா்சாதன வசதிப் பெட்டிகள், 2 மூன்றடுக்குள்ள குளிா்சாதன வசதிப் பெட்டிகள், 10 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டி, சரக்குகள் மற்றும் பிரேக் வேன் ஆகியவை புதிய வகைப் எல்எச்பி வகை பெட்டிகளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.