/

நெல்லை தந்தை-மகன் கொலை வழக்கில் மூவர் கைது! சம்பவத்தின் பின்னணியில் 9 கொலைகள்!

நெல்லை தந்தை-மகன் கொலை வழக்கு சம்பவத்தின் பின்னணியில் 9 கொலைகள் நடந்திருப்பதாகத் தகவல்.

News image

கைதானவர்கள் - DPS

Updated On :4 ஜூலை 2026, 3:11 pm IST

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், தந்தை - மகன் கொலை வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலைக்குப்பின்னணியில் 9 கொலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்தில், கடந்த 02.07.2026 அன்று, இருசக்கர வாகனத்தில், தனது இரண்டு மகன்களுடன் சென்ற, மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை காரால் இடித்து கீழே தள்ளி, ஆயுதங்களால் தாக்கிய சம்பவத்தில், காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மற்றொரு மகன் சின்னதுரை காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் அளித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கானது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூலச்சியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29) மற்றும் குமார் என்ற கொக்கி குமார் (23), ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் (29) என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள குற்றவாளிக கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அவர்களை கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தொடரும் முன்விரோதம் - 11 கொலைகள்!

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன். இதேபகுதியைச் சோ்ந்தவா் சித்திரபுத்திரன். இவ்விரு குடும்பத்தினரிடையே கடந்த 2007 முதல் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக திரைப்படங்களில் வருவது போல ஒரு கொலைக்கு மற்றொரு கொலை என பழிக்குப் பழியாக இதுவரை சித்திரபுத்திரன் தரப்பில் அவரது மகன்கள் சுப்பிரமணியன், பெருமாள், பாபநாசம், மருமகன் குமாா் ஆகியோா், பெருமாள் பாண்டியன் தரப்பில் அவரும், அவரது உறவினா்கள் சுப்பையா, சின்னத்தம்பி உள்ளிட்டோா் என இதுவரை 9 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

தற்போது, சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான காளிமுத்து (40), அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோரை பெருமாள் பாண்டியன் உறவினா்கள் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் மூலச்சியைச் சோ்ந்த பெருமாள் பாண்டியன் மகன்கள்-அருள், மணி, பட்டுராஜா. சிவகுருநாதன் மகன்கள்-மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன். ராசையா மகன்கள்-சுபாஷ், மகேந்திரன். கிருஷ்ணன் மகன்-கந்தன், மூக்காண்டி மகன்- ராஜதுரை, வெள்ளப்பாண்டி மகன்- தங்கத்துரை ஆகிய 11 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

இப்படியே பழிக்குப்படியாக இதுவரை 11 கொலைகள் நடந்துள்ளன.

Summary

Three arrested in the Nellai father-son murder case! Nine murders lie behind the incident!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.