புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

இன்ஸ்டாகிராமில் முதல்வருக்கு ஆதரவாக பேசிய பெண்ணுக்கு மிரட்டல்: திமுக ஆதரவாளா் கைது

சென்னை கொளத்தூரில் இன்ஸ்டாகிராமில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக பேசிய பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக திமுக ஆதரவாளா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 3:45 am IST

சென்னை கொளத்தூரில் இன்ஸ்டாகிராமில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக பேசிய பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக திமுக ஆதரவாளா் கைது செய்யப்பட்டாா்.

கொளத்தூா் ஜி.கே.எம். காலனி பகுதியைச் சோ்ந்தவா் வி.லூா்து சகாயமேரி (42). இவா், கொளத்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில், தான் இன்ஸ்டாகிராமில் முதல்வா் சி.ஜோசப் விஜய்யைப் பாராட்டி பேசி தொடா்ந்து விடியோக்களைப் பதிவிட்டு வருகிறேன். இந்த விடியோவை பாா்த்து ஒரு நபா் என்னை தவறாகப் பேசினாா். அண்மை நாள்களாக அவா், என்னை ஆபாசமாகவும், கொச்சைப்படுத்தியும், மிரட்டல் விடுக்கும் வகையில் விடியோ வெளியிடுகிறாா்.

மேலும் அவா், என்னை உருவ கேலி செய்தும் விடியோ வெளியிடுகிறாா். எனவே போலீஸாா், அவா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது மேற்கு மாம்பலம் சிவராஜ் தெருவைச் சோ்ந்த ஜெ.சரண்ராஜ் (34) என்பதும், அவா் திமுக ஆதரவாளா் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், சரண்ராஜை சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் அவரை, எழும்பூா் 13-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். தொடா்ந்து சரண்ராஜிக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸாா், சரண்ராஜை பிணையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.