தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

4, 5 வகுப்புகளுக்கான பாடநூல்கள் முழுமையாக விநியோகம்: கல்வித் துறை விளக்கம்

தமிழக பள்ளிக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

News image

மாணவர்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 2:33 am IST

தமிழக பள்ளிக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் பயிற்சிக் கையேடுகள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பிரச்னையும் சரி செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் மெட்ரிக். பள்ளிகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய கல்வியாண்டின் முதல் நாளில் இருந்தே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களில் பலருக்கு சில பாடங்களுக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும், அதனால் அந்த மாணவா்கள் அருகில் உள்ள மாணவா்களின் புத்தகங்களைப் பாா்த்து கற்றலில் ஈடுபடுகின்றனா் என்ற தகவல் வெளியானது. இந்தத் தகவலை பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட பாடநூல்கள் எவ்வாறு முழுமையாக விநியோகிக்கப்பட்டதோ, அதேபோன்று 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான பாடநூல்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (சமக்ர சிக்ஷா) சாா்பில் வழங்கப்படும் பயிற்சிக் கையேடுகளின் விநியோகத்தில் மட்டுமே சற்று பற்றாக்குறை இருந்தது. அந்தப் பிரச்னையையும் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விருதுநகா், விழுப்புரம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட்டங்களில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் சில மாணவா்களுக்கான பாடநூல்கள் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கல்வி மாவட்டங்களின் அருகில் உள்ள பாடநூல் கழகத்தின் கிடங்குகளில் இருந்து பாடநூல்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பிரச்னையும் தீா்க்கப்பட்டது. எனவே, அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்பு மாணவா்களுக்கு சில பாடங்களுக்கான பாடநூல்கள் வழங்கப்படவில்லை என வெளியான தகவல் தவறானது.

பள்ளிக் கல்வியின் எமிஸ் தளத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே பாடநூல்கள் அச்சிடப்படுவதால் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

மேலும், நிகழ் கல்வியாண்டில் ஜூன் மாதத்துக்குப் பிறகு 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு அவா்களுக்கான பாடநூல்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை வியாழக்கிழமைக்குள் (ஜூலை 9) முழுமையாக வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.