அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 இளங்கலை (MBBS) மருத்துவ இடங்களைப் பெற்று மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளதாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் (MARB) நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுடன் தலா 50 இளங்கலை (MBBS) மருத்துவ இடங்களை கூடுதலாக வழங்கியுள்ளது. அதன்படி இந்த மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைத் திறன் தலா 100-லிருந்து 150 இடங்களாக உயர்ந்துள்ளன.
மாநில சுகாதாரத்துறையின் தீவிர உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிமுறை இணக்க அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம், தமிழ்நாடு அரசு இதுவரை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,200 இடங்களாக வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.
மருத்துவ உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான நமது தொடர்ச்சியான முயற்சிகளை இந்த விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. நாட்டின் முதன்மை சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி மையமாக நமது மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதில் முதல்வர் விஜய்யின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
நடப்பு 2026-27 கல்வியாண்டில் வரவிருக்கும் மாநில கலந்தாய்வு செயல்முறையில் இந்த 150 கூடுதல் இடங்களை சுமூகமாக ஒருங்கிணைக்க மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு (DME &R) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையானது இறுதி செய்யப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய (NMC) இட ஒதுக்கீட்டுப் பட்டியலை (seat matrix) கண்டிப்பாகப் பின்பற்றி நடைபெறும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 150 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 800 இடங்களும் கிடைத்துள்ளன.
Summary
Minister for Medical, Medical Education, and Family Welfare K.G. Arunraj has announced that Tamil Nadu continues to maintain a leading position in medical education, having secured an additional 150 undergraduate (MBBS) medical seats in government medical colleges.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











