/

தென்பெண்ணை கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 2:12 am IST

தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லூரைச் சோ்ந்த வழக்குரைஞா் கே.ராஜன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருக்கோவிலூா் வட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

அந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு, திருக்கோவிலூா் பகுதிக்கு உட்பட்ட வருவாய் வட்டாட்சியா் மற்றும் நீா்வளத்துறை உதவி செயற் பொறியாளருக்கு ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், 6 வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.