சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தமிழக தலைமைச் செயலர் சாய் குமாரின் பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் ஐஏஎஸ் -இன் பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

தலைமைச் செயலர் சாய் குமார் - DIPR

Updated On :15 ஜூலை 2026, 3:44 pm IST

தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பணிக் காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆந்திரத்தைச் சேர்ந்த 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய் குமார், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2018 முதல் 2022 வரை அவரின் முதன்மை தனிச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருந்த அவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் தமிழக தலைமைச் செயலர் ஆனார்.

இதையடுத்து அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து ஓய்வுபெற இருந்த நிலையில், தற்போது 6 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று தலைமைச் செயலர் சாய் குமாரின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி தமிழக தலைமைச் செயலராக சாய் குமார் 2027 ஆம் ஆண்டு பிப். 28 வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

Summary

Tamil Nadu Chief Secretary Sai Kumar tenure extended by six months

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.