சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கோவையில் தவெக உள்கட்சி மோதல்: பெண் நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு

கோவையில் தவெக உள்கட்சி மோதலில் பெண் நிர்வாகி தாக்கப்பட்டது தொடர்பாக...

News image

கோவையில் தவெக உள்கட்சி மோதலில் பெண் நிர்வாகி மீது தாக்குதல் - டிஎன்எஸ்

Updated On :16 ஜூலை 2026, 10:06 am IST

கோவை கணியூரில் சூலூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்கச் சென்ற பெண் நிர்வாகியை தடுத்து நிறுத்தி, அவரது ஆடையை கிழித்து தகாத வார்த்தைகளால் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூலூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் முன்னிலையில் நடந்த இந்த மோதல் சக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமார் தலைமையில் கணியூர் பகுதியில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பேரவை உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்கச் சென்ற கட்சியின் ஊராட்சி செயலாளர் வசந்தியை கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கி ஆடையை கிழித்து தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து வசந்தியை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராகப் பணியாற்றி தேர்தலிலும் பணியாற்றிய பெண் நிர்வாகியை அந்த கட்சியினரே பேரவை உறுப்பினர் முன்னிலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து பாதிகப்பட்ட தவெக நிர்வாகி வசந்தி கூறியதாவது:

தவெக-வில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், தேர்தல் சமயங்களில் கட்சி அறிவித்த நபர்களுக்காக 25 நாள்களுக்கும் மேலாக இரவு பகல் பாராமல் தீவிரப் பிரசாரம் செய்தேன்.

தங்களது பகுதிக்கு வருகை தந்த சட்டப்பேரவை உறுப்பினரை மரியாதை நிமித்தமாக மாலை அணிவிக்கச் சென்றபோது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் தடுத்தனர். நீங்கள் எங்கள் அணியைச் சேர்ந்தவர் இல்லை, எங்களது அணியினர் மட்டுமே மாலை அணிவிக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஸ்வின் மற்றும் செந்தில் ஆகியோர் தன்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளியதாகவும், கழுத்தை நெரித்துத் தாக்கினர். இந்த மோதலில் தனது ஆடை கிழிக்கப்பட்டதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கண்ணீருடன் தெரிவித்தார்.

தொடர்ந்து கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புதிதாக அணி அமைத்து ஓரம்கட்டுவதாக தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான பெண் நிர்வாகி வசந்திக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டதுடன், ஆடை கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மயக்க நிலை காரணமாகவும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்சிக்காக உழைத்த பெண் நிர்வாகி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி, ஆடை கிழிபடும் அளவுக்குத் தாக்கிய உள்கட்சி நிர்வாகிகள் மீது தவெக தலைமை மற்றும் அதன் தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் உள்ளூர் தவெக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

TVK Internal Clash in Coimbatore: Uproar After Female Office-Bearer Assaulted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.