நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

வீட்டுக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் தவெக நிர்வாகி மீது வழக்கு

ஆலந்தூரில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக தவெக நிர்வாகி மீது புகார்

News image

வேம்புலி - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 12:00 pm IST

சென்னை ஆலந்தூரில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்த பெண்ணுக்கு தவெக ஆலந்தூர் தொகுதி வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி தொடர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பெண் தனியாக இருப்பதை அறிந்து இரவு நேரத்தில் அவரின் வீட்டுக்கு வேம்புலி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடுகளில் வேம்புலி ஈடுபட்டதாகவும், கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகவும் கூறி, வேம்புலியை தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கி, தவெக எம்எல்ஏ பி. சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Summary

Case filed against former TVK leader Vempuli for trespassing into a house and sexually harassing a woman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.