24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

பழனி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு: சார் - பதிவாளருக்கு முன்ஜாமின்!

பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி நில முறைகேடு வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின்....

News image

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Updated On :17 ஜூலை 2026, 4:59 pm IST

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பழனி கோயில் நில முறைகேடு வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி -க்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், நிலத்தை வாங்கிய பழனி சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த மூவருடன் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனியில் உள்ள அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அளித்த மனுவில் அவருக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

"இந்த நிலத்தை பாலசுந்தரம் என்ற பதிவாளர் 3-ம் தேதியே பதிவு செய்துவிட்டார். அப்போதே 90% பணிகள் முடிந்துவிட்டன. ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு பத்திரப்பதிவுக்கு வைக்கப்பட்டுவிட்டது. அவர் விடுமுறையில் சென்றதால் ஜஸ்டின் மணிகண்டன் அதற்கு டோக்கன் மட்டும் ஒதுக்கி பத்திரப்பதிவு செய்துள்ளார். அவர் தன்னுடைய பணியை சரியாகவே செய்துள்ளார்.

ஆனால், அரசு திட்டமிட்டு மணிகண்டனை மட்டும் குற்றவாளி ஆக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்துள்ளது. எங்களுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை" என ஜஸ்டின் மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

நில முறைகேடு பத்திரப் பதிவு ஜூலை 3 ஆம் தேதியே செய்ததாக அரசுத் தரப்பு கூறியதையடுத்து ,"பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் 2 சார் பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? சார் - பதிவாளர்கள் பாலசுந்தரத்தை ஏன் வழக்கில் இணைக்கவில்லை' என்று கேள்வி எழுப்பி ஜஸ்டின் மணிகண்டனுக்கு ரூ. 15,000 வைப்புத்தொகை, காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

பழனி கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Palani Temple Rs 100-crore land scam case: Anticipatory bail for Sub-Registrar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.