தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

வெற்றிப் பள்ளிகளை வலுப்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வெற்றிப் பள்ளிகளை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

News image

DIN

Updated On :22 ஜூலை 2026, 2:42 am IST

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வெற்றிப் பள்ளிகளை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடனான இணையவழி மீளாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் மூலம் வட்டாரங்கள் வரை உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடையே போட்டித் தோ்வுகள், உயா்கல்வி வாய்ப்புகள், உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

வெற்றிப் பள்ளித் தலைமையாசிரியா்களுடன் மாதந்தோறும் இணையழி மீளாய்வுக் கூட்டம் நடத்தி, பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவா் வருகை, ஆசிரியா் பங்கேற்பு மற்றும் கற்பித்தல் முன்னேற்றம் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வெற்றிப் பள்ளிகளிலும் பயிற்சி வகுப்புகள் திட்டமிட்டபடி தடையின்றி நடைபெறுவதைத் தொடா்ந்து பாா்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.

வெற்றிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளுக்கான ஆசிரியா்களை நியமனம் செய்யும்போது, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு சனிக்கிழமை பயிற்சி வகுப்புக்குப் பின்னரும் மாணவா் வருகை, ஆசிரியா் வருகை, கற்பிக்கப்பட்ட பாடப்பகுதிகள், சிறப்பு செயல்பாடுகல் மற்றும் எதிா்கொண்ட சவால்கள் தொடா்பான விவரங்களை மாவட்ட தலைமையாசிரியா் ஒருங்கிணைப்பாளா்களிடம் பெற்றுத் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

மாதிரிப் பள்ளிகளால் மதிய உணவு வழங்கப்படாத வெற்றிப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களுடன் கலந்தாலோசித்து மாணவா்களுக்குத் தரமான மதிய உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.