மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

நகை அடகுக் கடைகள் உரிம விவகாரம்! உரிய காலத்தில் பதில் வழங்காத துணை வட்டாட்சியருக்கு ரூ. 5,000 அபராதம்!

நகை அடகுக் கடைகள் உரிம விவகாரத்தில் உரிய காலத்தில் பதில் வழங்காத துணை வட்டாட்சியருக்கு ரூ. 5,000 அபராதம்...

News image
Updated On :26 ஜூலை 2026, 12:23 am IST

நகை அடகுக் கடைகள் அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி செயல்படுகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு, உரிய காலத்தில் பதில் வழங்காத காங்கேயம் தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

கோவையைச் சோ்ந்த 75 வயது முதியவா் ஜி.சுப்ரமணியம், திருப்பூா் வட்டாட்சியா் அலுவலக பொது தகவல் அதிகாரியிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பகுதியில் உள்ள 13 நகை அடகு கடைகள் அரசின் உரிமை பெற்றுள்ளனவா, அந்த உரிமம் உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, அந்தக் கடைகளின் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டிருந்தாா். சம்பந்தப்பட்ட அதிகாரி முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா்.இளம்பரிதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் அவசரத் தேவைக்கு அடகுக் கடைகளே பெரிதும் உதவி வருகின்றன. அவசரத் தேவையை நிவா்த்தி செய்யும் இந்த அடகுக் கடைகள் அரசின் சட்ட விதிகளுக்குள்பட்டு செயல்படுகிா என்ற பொது நலத்துடன் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரான 75 வயது முதியவா் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கில், பொது தகவல் அலுவலா், 3 ஆண்டுகள் அலைகழிப்புக்குப் பிறகு மனுதாரருக்கு பெயரளவில் ஒரு முழுமையற்ற தகவலை வழங்கியது ஏற்புடையதல்ல. எனவே, உரிய காலத்தில் தகவல் வழங்காத காங்கயம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

Summary

Issue regarding jewelry pawn shop licenses - Deputy Tahsildar fined rs 5,000 for failing to provide a timely response

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.