ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

7-ஆவது மாநில நிதி ஆணைய அறிக்கை: டிச.31 வரை அவகாசம்

உள்ளாட்சி அமைப்புகளின் நிதிச் சூழலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக 7-ஆவது மாநில நிதி ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசத்தை டிச. 31-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

News image

தலைமைச் செயலகம்.

Updated On :27 ஜூலை 2026, 3:59 am IST

உள்ளாட்சி அமைப்புகளின் நிதிச் சூழலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக 7-ஆவது மாநில நிதி ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசத்தை டிச. 31-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

மாநில அரசின் வரி வருவாய், கட்டணங்கள் மற்றும் சுங்கக் கட்டணங்கள் ஆகியவற்றில் இருந்து உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீட்டு முறையை வகுக்கவும், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சொந்த வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராயவும் மாநில நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது.

அதன்படி, இதற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த 6-ஆவது நிதி ஆணையம், கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது அறிக்கையை தமிழக ஆளுநரிடம் சமா்ப்பித்தது. அதன் பின்னா், முந்தைய திமுக அரசு 7-ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது.

உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மதிப்பாய்வு செய்து, மாநில அரசு வழங்க வேண்டிய நிதி விநியோகம் குறித்த பரிந்துரைகளை அந்த ஆணையம் அறிக்கையாக வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் நியமிக்கப்பட்டாா்.

அலுவல்சாரா உறுப்பினராக திருப்பூா் மேயா் தினேஷ் குமாரும், அலுவல் சாா் உறுப்பினா்களாக நகராட்சி நிா்வாக இயக்குநா், ஊரக மேம்பாட்டு ஆணையா், பேரூராட்சி ஆணையா் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா். ஆணையத்தின் உறுப்பினா் செயலராக ஐஏஎஸ் அதிகாரி பிரத்திக் தயாள் செயல்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆணையத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்க ஆக.31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்தக் காலக்கெடு டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சமா்ப்பிக்கப்படும் ஆணையத்தின் பரிந்துரைகள் 2027 ஏப். 1 முதல் 2032 மாா்ச் 31 வரையிலான 5 நிதியாண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.