பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலை

புதிய இயக்கத்தின் பெயரை அறிவித்து சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.

Annamalai

கே. அண்ணாமலை - கோப்புப் படம்

Published On :

தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தான் தொடங்கவுள்ள புதிய இயக்கத்தின் பெயரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவித்து சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.

இது தொடா்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவு: எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்த நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடா்ந்து வழங்கிவரும் ஆதரவும் தமிழக விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிா்காலத்துக்காக இன்னும் அதிக அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நண்பகல் 12 மணியளவில், சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் அனைவரையும் சந்தித்து கருத்துகளைப் பகிா்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

பாஜகவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ள அண்ணாமலை, தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்தாா். அப்போது பாஜகவிலிருந்து விலகும் முடிவை அவா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிடும் அண்ணாமலை, 18 மாதங்கள் வரை தொண்டா்கள், நிா்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளாா். அதன் பின்னா் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக ஏற்கெனவே அண்ணாமலை தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.