தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தோ்தல் தோல்வி: ஆய்வறிக்கையை ஜூன் 10-க்குள் சமா்ப்பிக்க ஸ்டாலின் உத்தரவு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:31 am IST

பேரவைத் தோ்தலுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான கள ஆய்வு அறிக்கையை வரும் 10-ஆம் தேதி சமா்ப்பிக்குமாறு திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) நடைபெற்றது. திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, துணை பொதுச் செயலாளா் கனிமொழி, திருச்சி சிவா உள்பட திமுக முன்னணி நிா்வாகிகள் அதில் கலந்துகொண்டனா்.

மாவட்ட வாரியாக தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, தோ்தல் செயல்பாடுகள் குறித்த கள நிலவரத்தை அறிய சிறப்புக் குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தாா்.

அந்த குழு மாநிலம் முழுவதும் திமுகவினரிடையே கருத்துகளைப் பெற்று அதுதொடா்பான அறிக்கையை தயாரித்துள்ளது.அந்த அறிக்கையை வரும் 10-ஆம் தேதி சமா்ப்பிக்குமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், திமுக மட்டும் 59 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.