உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

மக்கள் மேடை இயக்கத்தின் நோக்கம் என்ன? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

மக்கள் மேடை இயக்கத்தின் நோக்கம் மற்றும் அது எவ்வாறு இயங்கும் என லதா ரஜினிகாந்த் பேசியது பற்றி...

News image

லதா ரஜினிகாந்த் - படம் - பிடிஐ

Updated On :9 ஜூன் 2026, 6:50 pm IST

மக்கள் மேடை இயக்கத்தின் நோக்கம் மற்றும் அது எவ்வாறு இயங்கும் என்று லதா ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் லதா ரஜினிகாந்த் பேசியதாவது:

மக்கள் மேடை என்பது நாட்டில் உள்ள அனைவரும் தன் நாடு, தன் மாநிலம் மற்றும் தான் வாழும் இடத்தின் மீது காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் அன்பைப் பற்றியது.

நாம் ஆழ்ந்த ஞானம், வலுவான சமூக அடித்தளங்கள், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட வளமான கலாசார பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற நாட்டில் இருக்கிறோம். மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர். இருப்பினும், இன்று நம்மில் பலர் அதிகமாக தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம்.

தொழில்நுட்பமும் நவீனமயமாக்கலும், சில வழிகளில், நம்மை இயற்கையிலிருந்து வேறுபடுத்தியுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுகள் உள்ளன.

நமது விவசாயிகள், குடிசைத் தொழில்கள் செய்பவர்கள், கைவினைஞர்கள், வணிகர்கள் ஆகிய அனைவருக்கும், இன்று இருப்பதை விட மிகப் பெரிய அளவில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. நாம் மேற்கத்திய கொள்கைகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால், அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய மரபை விட்டுச் செல்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

நாம் நம் பிள்ளைகளுக்கு எத்தகைய சமூகம், நாடு, அரசு மற்றும் சுற்றுச்சூழலை விட்டுச் செல்கிறோம் என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

மக்கள் மேடை என்பது இதைத்தான் குறிக்கிறது. என் மாநிலத்துக்கு நான் எப்படி சேவை செய்ய முடியும்? என் நாட்டிற்கு நான் எப்படிச் சேவை செய்ய முடியும்? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதே அதன் நோக்கம். பொது நன்மைக்காக நமது திறமைகள், ஆற்றல், அறிவு மற்றும் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதே மக்கள் மேடை.

தற்கொலைத் தடுப்பு, மாணவர்களுக்காக ஆலோசனை வழங்குவது போன்ற முக்கியத் திட்டங்களை நாங்கள் கொண்டிருப்போம். இவை அனைத்தும் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் மேடையின் ஒரு முக்கிய அங்கமாக மாறும் என்று தெரிவித்தார் லதா ரஜினிகாந்த்.

முன்னதாக, கடந்த ஜூன் 5 ஆம் தேதி மக்கள் மேடை என்ற இயக்கத்தை லதா ரஜினிகாந்த் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Latha Rajinikanth gave an interview on Tuesday (June 9) regarding the objective of the 'Makkal Medai Iyakkam' and how it will function.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.