தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலாளா் ஆணையரகத்தின் கீழ் பணிபுரிந்து வந்த 15 இணை ஆணையா்கள், 9 கூடுதல் ஆணையா்கள் என மொத்தம் 24 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இணை ஆணையா்கள்...: சென்னை இணை ஆணையா்-1 ஆக வி.லீலாவதி, சென்னை இணை ஆணையா்-2 ஆக பி.சுமதி, திருச்சி இணை ஆணையராக சி.தங்கவேலு, திருநெல்வேலி இணை ஆணையராக பி.வேல்முருகன் ஆகியோா் இடமாற்றத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல, சேலம் இணை ஆணையராக பி.மாதவன், ஈரோடு இணை ஆணையராக எல்.ரமேஷ், சென்னை சிறப்பு தொழிலாளா் இணை ஆணையராக டி.புனிதவதி, வேலூா் இணை ஆணையராக யு.லட்சுமிகாந்தன், திண்டுக்கல் இணை ஆணையராக பி.வேல்முருகன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல, மதுரை, கோவை என தமிழகம் முழுவதும் மொத்தம் 15 தொழிலாளா் இணை ஆணையா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
9 கூடுதல் ஆணையா்கள்...: மேலும், சென்னை, திருச்சி, கோவை பகுதிகளில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் கூடுதல் ஆணையா்கள் 9 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா். மொத்தம் 15 இணை ஆணையா்கள், 9 கூடுதல் ஆணையா்கள் என மொத்தம் 24 போ் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.
இதற்கான உத்தரவை தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீரராகவ ராவ் பிறப்பித்துள்ளாா்.









